பில்லூர் பட்டானி அய்யா தர்கா | Pillur Pattani Ayya Dargah| ஆன்மிக கதைகள்

img

பில்லூர் பட்டானி அய்யா தர்கா


ஹஜரத் சையது மதார் சிக்கந்தர் ஷஹீது வலியுல்லாஹ் என்ற பட்டாணி அய்யாஅவர்கள் நமது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பதினெட்டாம் தலைமுறையில் உதித்தவர்கள் ஆவர்கள். ஏர்வாடி பாதுஷா நாயகம் அவர்கள் தென்னகத்தில் இஸ்லாத்தின் ஒளி ஏற்ற வந்த போது குத்பு சுல்தான் சையது இப்ராஹிம் ஏர்வாடி பாதுஷா நாயகம் அவர்களின் அழைப்பை ஏற்று, தன்னையும் இஸ்லாத்தின் பனிக்காக அவர்களோடு இணைத்துக் கொண்டு தீன் பணி ஆற்றுவதற்காக ஒரே கப்பலில் தென்னகம் வந்து தீன் பணி ஆற்றி பாதையில் ஷஹீதாக்க பட்டு இன்றும் ஆன்மிக அரசாட்சி செய்துகொண்டிருக்கிறார்கள். பாதுஷா நாயகத்தை நாடி வரும் மக்களின் கஷ்டங்களையும், பில்லி, சூனியம், ஏவல், ஜின், ஷைத்தான்களுடைய தீங்கிலிருந்தும் எதிரிகளுடைய தீங்கிலிருந்தும், கண்ணேறு பலா முஷீபத்துக்களில் இருந்தும் அல்லாஹ்வின் அருளை கொண்டும் தன்னுடைய தவ வலிமையினாலும் இன்றளவும் மக்களுக்கு நல்லாசியும்,பாதுகாப்பும் வழங்கி கொண்டிருக்கிறார்கள்.